Tamilnadu 10th,11th.12th Std Public Exam Result 2025 : Here is the direct website link,date,time and steps to check online
தமிழ்நாடு 10ம் வகுப்பு மற்றும் 11 & 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் / ஏப்ரல் 2025 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதியும் இணையதள முகவரியும் வெளியீடு.
மார்ச் / ஏப்ரல் - 2025-ல் நடைபெற்ற 2024-2025 ஆம் கல்வியாண்டிற்காண பத்தாம் வகுப்பு ( SSLC / 10TH ) மற்றும் மேல்நிலை ( 11th / HSC -I YEAR / +1 & 12th / HSC-II YEAR / +2) பொதுத்தேர்வு முடிவுகள் வருகின்ற மே மாதம் 06.05.2025 அன்று வெளியிடப்பட வாய்ப்புள்ளது.
மேலும் இத்தேர்வினை தமிழகம் முழுவதிலும் இருந்து கடந்த மார்ச் மாதம் 3ம் தேதியில் இருந்து ஏப்ரல் 15 ம் தேதிவரை நடைபெற்ற தேர்வினை பல லட்சம் பேர் எழுதிய நிலையில் தற்போது அதற்காண தேர்வு முடிவிற்காக காத்துக் கொண்டு இருக்கின்றனர்.
மேலும் தேர்வுகளானது +2 வகுப்புகளுக்கு 3/3/2025 முதல் தொடங்கி 25/03/2025 வரையிலும். +1 வகுப்புகளுக்கு 5/3/2025 முதல் தொடங்கி 27/3/2025 வரையிலும். மேலும் 10ம் வகுப்பிற்கு 28/3/2025 முத்ல் தொடங்கி 15/4/2025 வரையிலும் நடைபெற்றது . இதில் +2 தேர்வினை 8.21 லட்சம் மாணவர்களும், 10ம் வகுப்புத் தேர்வை சுமார்9.13 லட்சம் மாணவர்களும் எழுதினர்.
தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நேரம் மற்றும் தேர்வு முடிவுகளை அறிந்துக்கொள்ளும் இணையதள முகவரி அறிவிக்கப் பட்டிருக்கிறது.
வகுப்பு |
தேர்வு முடிவு வெளியிடப்படும் நாள் மற்றும் நேரம் |
தேர்வு முடிவினை அறிய இணையதள முகவரி |
பத்தாம் வகுப்பு ( 10th / SSLC ) |
19.05.2025
|
|
மேல்நிலை முதலாம் ஆண்டு ( +1 / 11th / HSC – 1 YEAR ) மேல்நிலை இரண்டாம் ஆண்டு ( +2 / 12th / HSC – 2 YEAR ) |
19.05.2025
09/05/2025 ( 6/5/2025 ம் தேதியன்று எதிர்ப்பார்க்கப் படுகின்றது ) |
மாணவர்கள் தங்களது தெர்வு முடிவினை அறிய பல்வேறு வழிகளை தேர்வுத்துறை ஏற்படுத்தி உள்ளது மேற்படி அனைவரும் தங்களது தேர்வு முடிவினை மேற்கண்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண்
( REGISTER NUMBER ) மற்றும் பிறந்த தேதி ( DATE OF BIRTH )ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
பள்ளி மாணவர்களுக்கு( REGULAR SCHOOL STUDENTS ) அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கப்பேசி எண்ணிற்கும் ( MOBILE NUMBER ) தணித்தேர்வர்களுக்கு ( PRIVATE CANDIDATES ) ஆன் - லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி ( MESSAGE )வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.
தேர்வு முடிவினை இணையதளம் மூலம் அறியும் வழிமுறை
- மாணவர்கள் Google Chrome அல்லது Firefox Browser ஐ தங்களது மொபைல் அல்லது கணிப்பொறியில் திறந்துக் கொள்ளவும்ப்
- அதில் www.tnresults.nic.in அல்லது dge.tn.gov.in என்ற அரசின் தேர்வுத்துறை இணையதளப் பக்கங்களை Type செய்து search கொடுக்கவும்.
- பிறகு தோன்றும் பக்கத்தில் நீங்கள் சம்பந்தப்பட்ட தேர்வு முடிவினை ( TN HSC II Year / +2 RESULT 2025 ) or ( TN HSC -1 year / +1 RESULT 2025 ) or ( TN SSLC RESULT 2025) தேர்வு செய்து Click செய்யவும்.
- பிறகு தோன்றும் பக்கத்தில் உங்களது தேர்வு பதிவெண் ( Reg No) பிறந்த தேதி ( Date Of Birth ) மற்றும் கேட்கப்படும் பிற விவரங்களை தவரில்லாமல் உள்ளிடவும்.
- உள்ளிட்ட விவரங்களை மேலும் சரிபார்த்த பிறகு “ SUBMIT " பட்டணை அழுத்தவும்.
- அடுத்த பக்கத்தில் உங்களுக்காண தேர்வு முடிவுகள் மதிப்பெண் விவரத்துடன் வெளியாகும் அதனை DOWNLOAD செய்துக் கொள்ளலாம் PRINT OUT எடுக்கலாம் அல்லது SCREENSHOT எடுத்து நமது மேற்ப்ப்டி பயன்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ளலம்.
DIRECT WEBSITE LINKS TO CHECK YOUR RESULT ONLINE
DEAR STUDENTS PLEASE NOTE : தேர்வில் வெற்றிபெற்று மாணவர்கள் அனைவரும் அடுத்த உயர் வகுப்பில் நல்லமுறையில் இணைந்து கல்வி கற்றிட வாழ்த்துக்கள். அத்துடன் ஒருவேளை ஒரு சில மதிப்பெண்களிலோ அல்லது ஒரு சில பாடங்களிலோ தவரும் பட்சதில் அதர்காக அனைத்தும் முடிந்துவிட்டதாக கருதாமல். இது வெறும் ஒரு தேர்வு மட்டுமே என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அத்துடன் இதுபோல் அடுத்துவரும் தேர்வுகளில் பங்கேற்று நல்லமுறையில் எழுதி மேற்ப்படிப்பை நல்லமுறையில் தொடரலாம் என்பதனையும் நினைவில் வைக்கவேண்டும் அன்பு மாணவர்களே. அத்துடன் மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதனையும் புரிந்துக் கொள்ளுங்கள். பிறருடன் உங்களை ஒப்பிடுவதோ அல்லது, பிறர் மதிப்பெண்களுடன் ஒப்பிட்டு வீனாக நேரத்தை வீண் செய்வதோ இல்லாமல். உங்கள் மீது முழு நம்பிக்கையுடன் செயல்படுங்கள். வெற்றி நிச்சயம் உங்கள் வசம் இருக்கும். அவ்வெற்றி இன்றும் கிடைக்கலாம் அல்லது நாளையும் கிடைக்கலாம் , என்று கிடைத்தாளும் வெற்றி வெற்றியே .
உங்களை மனதார வாழ்த்தும் ; MOON & BRIGHTBOARD.NET
0 Comments