Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Learn Passive To Active Voice In Tamil With Rules And Examples - தமிழ் வழியில் செயப்பாட்டு வினை வாக்கியம் உதாரணத்துடன் | MOON BOSS

PASSIVE VOICE TO ACTIVE VOICE WITH RULES AND EXAMPLES IN TAMIL

Learn passive voice to Active voice with rules and examples brightboard.net





 செயப்பாட்டு வினை வாக்கியத்தை செய்வினைை  
வாக்கியமாக மாற்றும் மிக எளிய வழிமுறையை இந்த பதிவில் காணலாம்.

வணக்கம் நண்பர்களே!
இந்த இலக்கணப் பாடத்தில் நாம் ஏற்கெனவே கற்ற செய்வினை வாக்கியம் மற்றும் செயப்பாட்டு வினை வாக்கியம்  ( ACTIVE VOICE AND PASSIVE VOICE ) இலக்கண தொடரில முதல் பகுதியில் எவ்வாறு செய்வினை வாக்கியத்தை (Active Voice) செயப்பாட்டுவினை(Passive Voice) வாக்கியமாக மாற்றுவது என்பதை விரிவாகவும் தெளிவாகவும் சரியான பட விளக்கங்கள், உதாரண வாக்கியங்கள் மற்றும் வீடியோ பாடத்துடனும் கற்றோம்,
அந்தப் பாடத்தில் செய்வினை வாக்கியம் மற்றும் செயப்பாட்டு வினை வாக்கியத்தில் படிப்படியாக இருக்கக்கூடிய பகுதிகள் (subject, verb, object etc) பற்றியும், அதோடு செய்வினை வாக்கியத்தில் இருந்து எவ்வாறு செயப்பாட்டு வினை வாக்கியத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் தெளிவாக அறிந்து கொண்டோம்.
          அதேபோல் இந்தப் பதிவிலும் நாம் எவ்வாறு செயப்பாட்டுவினையை செய்வினை வாக்கியமாக Passive voice to Active Voice மாற்றுவது என்பதை தெளிவாக காணலாம்!

நாம் உதாரணத்திற்காக கீழே உள்ள வாக்கியங்களைக் காண்போம்.

He Sings A Song (A.V)

A Song Is Sung By Him  (P.V)

மேலே கொடுக்கப்பட்டுள்ள உதாரணத்தில் முதல் வாக்கியமானது செய்வினை வாக்கியம் அதாவது Active Voice என்றும், இரண்டாவது வாக்கியம் செயப்பாட்டு வினை வாக்கியம் Passive Voice என்றும் அழைக்கப்படுகின்றது. நாம் செய்வினை வாக்கியத்தை செயப்பாட்டுவினை வாக்கியமாக மாற்ற எந்தெந்த படிநிலைகளை பின்பற்றினோம், அதேபோலவே செயப்பாட்டுவினை வாக்கியத்தை செய்வினை வாக்கியமாக மாற்றும் போதும் கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தின் கூறுகளை கவனத்தில் கொண்டு அதில் தேவைப்படக்கடிய மாற்றங்களை நாம் செய்ய வேண்டும். செயப்பாட்டுவினை வாக்கியத்தை (Passive Voice) செய்வினை வாக்கியமாக(Active Voice) மாற்றுவதற்கு முன் நாம் ஏற்கனவே கற்ற செய்வினை வாக்கியத்திற்கும் செயப்பாட்டுவினை வாக்கியத்திற்கும இடையில் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை சற்று நினைவு கூறுவது நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
        Differences and similarities between ACTIVE VOICE     and  PASSIVE VOICE.
செய்வினை வாக்கியம்  மற்றும் செயப்பாட்டுவினை வாக்கியங்களுக்கு இடையில் உள்ள வேற்றுமை ஒற்றுமைகள்.

Active Voice : செய்வினை வாக்கியத்தில் செய்பவருக்கு(doer) முக்கியத்துவம் தரப்படுகிறது எனவே இவ்வாக்கியத்தில் வினையை அல்லது செயலை செய்பவர் வாக்கியத்தின் முதலில் வருகிறார் 

He Singsa song

Passive Voice : செயப்பாட்டுவினை வாக்கியத்தில் செய்யும் செயலானது முதன்மைப்படுத்த படுவதால் செயலானது வாக்கியத்தின் முதலில் வருகிறது.

A song is sung be him

Active Voice : செய்வினை வாக்கியத்தில் செயலைச் செய்பவருக்கு முக்கியத்துவம் தரப்படுவதால் செய்யும் செயலானது வாக்கியத்தின் கடைசியாக வருகிறது. 

He sings a song 

Passive Voice : செயப்பாட்டுவினை வாக்கியத்தில்செய்யும் செயலுக்கு முக்கியத்துவம் தரப்படுவதால் அந்த செயலை செய்பவர் வாக்கியத்தின் கடைசியாக object ஆக வருகிறார்.

A song is sung by him 

Active Voiceசெய்வினை வாக்கியத்தில் Main verbs உடன்(sings) எந்தவிதமான helping verbs (is,am,are,was,were,etc) பயன்படுத்த மாட்டோம். 

He sings a song  - இந்த செய்வினை வாக்கியத்தை நீங்கள் கவனித்தால் உங்களுக்கே புரியும்! இதில் He என்ற செயலைச் செய்பவருக்கு அடுத்து Sings என்ற Main verb  மட்டுமே வந்துள்ளது அதனை அடுத்து Object வந்துள்ளது வேறு Auxiliary verbs (is,am,are,was,were,etc)பயன்பாடும் இங்கு இல்லை.


Passive Voice : மேலே கொடுக்கப்பட்டுள்ள உதாரணத்தை பார்த்தாலே உங்களுக்கு புரியும் செய்வினை வாக்கியத்தில் இருந்து செயப்பாட்டுவினையாக மாற்ற நமக்கு Main verb (sings) உடன் Helping Verb (is) tense கு ஏற்ப (present or past) பயன்படுத்துவது கட்டாயமாகிறது.

Active Voice : செய்வினை வாக்கியத்தில் Subject (he)ஆக இருப்பது செயப்பாட்டுவினைக்கு செல்லும்போது Object (him) ஆகவும், Object (a song) ஆனது செயபபாட்டு வினை வாக்கியத்தில் Subject (A Song) ஆகவும் மாறுகிறது.

He sings a song (A.V) - In A.V a song is an object

A song is sung by him (P.V) -in P.V -A song is a subject


Passive Voice : செயப்பாட்டு வினையில் Subject (A Song) ஆக இருப்பது செய்வினை வாக்கியத்தில் Object (a song) ஆகவும் அதேபோல் Object (him) ஆக இருப்பது செய்வினை வாக்கியத்தில் Subject (He) ஆகவும் மாற்றம் பெறுகிறது.

Active Voice :செய்வினை வாக்கியத்தை செயப்பாட்டுவினை வாக்கியமாக மாற்றும்போது செய்வினை வாக்கியத்தின் வினைச்சொல்லின் Tense கு ஏற்ப செயப்பாட்டு வினையாக மாற்றும் போது வினைச் சொற்களில் மாற்றங்கள் ஏற்படுகிறது. பொதுவாக செய்வினை வாக்கியத்தில் helping verbs இல்லாமல் main verb (sings) மட்டுமே பயன்படுத்துவோம். 

Passive voice :ஆனால் செயப்பாட்டுவினை வாக்கியத்தில் main verb உடன் Auxiliary verbs (is, am, are, was, were, ) ஆகிய ஏதேனும் ஒன்றை main verb ன் V3 அதாவது Past Participle உடன் இதன் முன்பு வரும் subject ன் தன்மைக்கு ஏற்ப (singular or plural) இணைத்து பயன்படுத்துவோம்.

Active Voice : இங்கு நாம் வினைச்சொல் verb மற்றும் object ஐ இணைக்க இணைப்புச் சொல் (conjunction) by பயன்படுத்துவதில்லை.

He sings a song - இங்கு இணைப்புச் சொல் by பயன்படுத்தவில்லை 


Passive Voice : செயப்பாட்டுவினை வாக்கியத்தில் வினைச்சொல் verb மற்றும் object இடையே இணைப்புச் சொல் பயன்படுத்துகிறோம். மேலும் இந்த இணைப்புச் சொல் by செயப்பாட்டு வினை வாக்கியத்தை சுலபமாக செய்வினை வாக்கிலிருந்து இனம் காண உதவுகிறது. 


A song is sung by him

இந்த உதாரணத்தில் verb ( is sung) வினைச்சொல் மற்றும் object (him) இடையே இணைப்புச் சொல் by வந்துள்ளதை காணலாம்.

Active and Passive Voice : செய்வினை மற்றும் செயப்பாட்டு வினை வாக்கியங்களில் பிரதிப் பெயர்ச்சொற்கள் (PRONOUN)வாக்கியத்தின் வகைக்கேற்ப மாறுபடும்.


ACTIVE VOICE            PASSIVE VOICE

I.                                        ME

HE                                    HIM

SHE                                  HER

THEY                              THEM

WE                                      US

YOU                                  YOU

IT                                         IT 

எனவே நாம் மேலே சொன்ன இந்த முக்கியமான செய்வினை மற்றும் செயப்பாட்டு வினை வாக்கியங்களுக்கு இடையிலான வேற்றுமைகளை அறிந்து கொண்டாள் நம்மால் செய்வினை வாக்கியத்தில் இருந்து செயப்பாட்டு வினை வாக்கியத்திற்கும்(Active voice to passive voice) அதேபோல் செயப்பாட்டுவனை வாக்கியத்திலிருந்து செய்வினை வாக்கியத்திற்கு (Passive voice to Active voice) மாற்றம் செய்வதும் மிகவும் சுலபமாக இருக்கும்.

இப்பொழுது நாம் ஒரு செயப்பாட்டுவினை Passive voice வாக்கியத்தை, செய்வினை வாக்கியமாக Active voice மாற்றுவது எப்படி என்று பார்க்கப் போகின்றோம்.


A book was given by premraj 

இந்த செயப்பாட்டுவினை வாக்கியத்தை செய்வினை வாக்கியமாக மாற்றுவதற்கு முன்பு இந்த வாக்கியத்தின் முக்கிய பகுதிகளை அடிக்கோடு இடுவது முதல் பணியாகும்.

A book was given by premraj 

 Subject    verb                Object 

செயப்பாட்டுவினை வாக்கியத்தை இவ்வாறு Subject (A book), Verb (was given) மற்றும் Object (Premraj) என பிரித்த பிறகு அவற்றை செய்வினை வாக்கியமாக(Active Voice)ஆக மாற்றத் துவங்கலாம்.


* முதலில் செயப்பாட்டுவினை வாக்கியத்தில் (passive voice)உள்ள object (Premraj) தனை மாற்றப்போகும் செய்வினை வாக்கியத்தின் (Active Voice), Subject ( Premraj)ஆக கொண்டுவரவேண்டும்.

Premraj..........................

*பிறகு வாக்கியத்தில் உள்ள வினைச்சொல் (verb) வகையினை (Auxiliary verbs)ஐயும் சேர்த்து அது எந்த வகையில்(Present, past or feature tense) உள்ளது என்று அடையாளம் காண வேண்டும். அவ்வாறு அடையாளம் காண கீழ்வரும் சிறு குறிப்பு உதவும்.

Auxiliary verbs used is passive voice:

For Present Tense  singular - is,am 

For Present Tense  plural - are 

Past tense singular - was,

Past tense plural  - were 

(Simple feature - will, shall, etc) 

நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தில் வந்திருக்கக்கூடிய வினைச்சொல் verb பகுதியை காணும்பது Was given என்று உள்ளது. இதனை நாம் Auxiliary verb -was ஆனது past tense ஐ குறிக்கிறது என்பதை அறிகிறோம், அதோடு given என்பது இந்த  செயப்பாட்டுவினை வாக்கியத்தில் give என்ற main verb ன்  V3 அல்லது past participle ஆகும்.மேலும் Active Voice And Passive Voice கற்க Main Verbs ன் பயன்பாட்டை அறிந்திருப்பது மிகவும் அவசியம்.

Present (v1)       past (V2)         past participle (V3)

give      -          gave  -                   given 


To Check And Learn REGULAR VERBS LIST CLICK HERE

To Check And Learn IRREGULAR VERBS LIST CLICK HERE

இப்பொழுது subject கு அடுத்த சரியான வினைச்சொல்லை தேர்ந்தெடுக்க வேண்டும் 

Premraj....

வினைச் சொல்லானது was given என வந்திருப்பதால்  செய்வினை வாக்கியம் ஆனது past tense ல் வரவேண்டும் என்பதை அறிய முடிகிறது. அதேவளையில் இங்கே பயன்படுத்தியுள்ள Auxiliary verb was ஆனது செய்வினை வாக்கியமாக மாற்றும் போது நீக்கப்பட்டு, கொடுக்கப்பட்டுள்ள main verb(v3 or past participle) given என்பதன் V2 or past tense என்பதற்கு மாற்ற வேண்டும்.(give - gave - given)

 நாம் அவ்வாறு மாற்றும் போது

Premraj gave............ ( Auxiliary verb omitted in A.V)

என்று வரும். 

*தற்போது செயப்பாட்டு வினை( passive voice) வாக்கியத்தில் உள்ள Subject (A book )ஆனது செய்வினை வாக்கியத்தின் (Active Voice ) object ஆக வரவேண்டும். அதோடு இணைப்புச் சொல் (CONJUNCTION) by ஆனது தவிர்க்கப்பட வேண்டும்.

எனவே இப்பொழுது வாக்கியமானது...

  Premraj gave a book          

என்று செய்வினை வாக்கியத்திற்கு (Active Voice) சரியாக மாற்றப்பட்டு விட்டது. 

எனவே 

A book was given by Premraj 

என்ற Passive Voice ன் சரியான  Active Voice வாக்கியம்

 Premraj gave a book ஆகும். 



இவ்வாறு நாம் எந்தவிதமான வாக்கியங்கள் செய்வினை மற்றும் செயப்பாட்டு வினையில் கொடுக்கப்பட்டிருந்தாலும் அவற்றை இனம்கண்டு மேலே குறிப்பிட்ட வித்தியாசங்களையும் குறிப்புகளையும் நினைவில் கொண்டு அவற்றை எளிமையாக நம்மால் மாற்றம் செய்து பேசுவதற்கும் எழுதுவதற்கும் திறம்பட பயன்படுத்த முடியும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

மீண்டும் அடுத்த வகுப்பில் சந்திக்கலாம் நன்றி!


ACTIVE VOICE TO PASSIVE VOICE IN TAMIL - 

பதிவை காண     👉 CLICK HERE


இந்தப் பாடத்தின் விளக்கமான வீடியோ பதிவைக் காண,கீழுள்ள வீடியோவைப் காணவும்.👇


Post a Comment

0 Comments